உங்க உணவு அமிலத்தன்மையா - காரத்தன்மையா? - உணவே மருந்து - அவசியம் படிக்கவும்!!

கீழுள்ள தகவல் watsapp குழு ஒன்றில் மருத்துவர் திரு சிவராமன் என்பவரிடமிருந்து பெறப்பட்டது. டாக்டர் சிவராமன், பழனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளுடன் அவரது கட்டுரை அப்படியே கீழே கொடுக்க பட்டுள்ளது. இது அனைவரும் படித்து புரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். புரிந்த விட்டால் பல நோய்களை தவிர்க்கும் முறைகளை மிக சாதாரணமாக நீங்களே கையாள துவங்கி விடுவீர்கள்!

***************************************
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..உணவே மருந்து என்னும் வார்த்தையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? நன் உடலுக்கு எந்த உணவு வகைகள் நன்மை செய்யும், சைவம் நல்லதா அசைவம் நல்லதா, எந்த உணவில் எந்த சத்துகள் உள்ளன என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருப்போம் அல்லது படித்திருப்போம்..உணவைப் பற்றிய இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படை என்ன தெரியுமா? நம் உடலில் உள்ள pH இன் அளவு சரியாக இருக்கும் அளவைப் பொறுத்தே, நாம் உண்ணும் உணவு நமக்கு நல்லது செய்கிறதா அல்லது கெடுதல் செய்கிறதா என்பததற்காகதான் இவ்வளவு ஆராய்ச்சிகளும் உணவு பற்றிய விஷயத்தில் நடந்து கொண்டுள்ளன..உங்களில் சிலர் pH என்றால் என்ன என்று அறிந்திருக்கலாம்..ஆனால் பலருக்கும் pH என்றால் என்ன என்பதைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கும்..அதனால் நாம் மேலே செல்லும்முன் pH என்றால் என்ன என்று சுருக்கமாக பார்ப்போம்..

pH என்றால் the power of hydrogen, அதாவது hydrogen அயனி எந்த அளவுக்கு உள்ளது என்பதன் அர்த்தம்..இந்த pH என்பது 1 இலிருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது..pH அளவு 7 என்றிருந்தால் NEUTRAL என்று அர்த்தம்..7 க்கு குறைவாக இருந்தால் ACIDIC என்றும் 7 க்கு அதிகமாக இருந்தால் ALKALINE என்றும் அர்த்தம்..நம் உடல் எப்போதும் சிறிதளவு ALKALINE ஆக இருப்பது எப்போதும் நல்லது..அதாவது 7 க்கு மேல் 7.30 TO 7.45 என்ற அளவில் {SLIGHTLY TOWARDS ALKALINE} இருக்கும்போது நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்..அதனால் நம் உடலின் NORMAL pH level என்பது 7.2 to 7.4 என்பதே...pH level 7 க்கு குறைவாக இருந்தால் நமது உடல் ACIDIC நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்..அதனால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் நம் உடலில் pH இன் அளவு சிறிதளவு alkaline ஆக, அதாவது 7 க்கு மேல் 7.2 to 7.4 என்ற அளவில் இருக்க வேண்டும்..

pH ன் அளவு 7 க்கு குறைவாக இருக்கும்போது, அதாவது உடல் acidic condition இல் இருக்கும்போது அனைத்து வகையான உடல் பிரச்சனைகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன..நம் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையே  எப்போதும் நம் உடலை alkaline condition இல் வைத்திருப்பதே ஆகும்..இந்த pH அளவை maintain பண்ணுவதில் நாம் உண்ணும் உணவே முக்கிய பங்காற்றுகிறது..நம் உடல் acidic condition ஆக மாறும்போது, அதாவது pH level 7 க்கும் குறைவாக இருக்கும்போது, சாதாரண உடல் அசதியில் இருந்து கேன்சர் வரை நோய் உருவாக இந்த pH level acidic ஆக இருப்பதால்தான்..

இந்த pH level யை நாமே பரிசோதிப்பது எப்படி, acidic உணவு வகைகள், alkaline உணவு வகைகள், acidic level இல் நம் உடல் இருந்தால் தோன்றும் நோய்கள் எவை என்பதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம், நன்றி!!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..நேற்றைய பதிவில் நம் உடலில் pH level இன் அளவு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி பார்த்தோமல்லவா? இந்த pH level யை maintain செய்வதில் உணவே பெரும் பங்காற்றுகிறது..முடிந்தவரை alkaline உணவு வகைகளை மட்டுமே எடுத்துக்கொள்வது நல்லது..acidic உணவுவகைகளை தவிர்க்கவும்..alkaline மற்றும் acidic உணவு வகைகளை பட்டியலிட்டால் அது மிகவும் நீளும்..அதனால் கீழே உள்ள link யை click செய்து நீங்கள் acidic and alkaline உணவு வகைகளை அறிந்து கொள்ளலாம்..

பொதுவாக அனைத்து பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவைகள் alkaline வகையைச் சேர்ந்த உணவுகள்..மசாலா கலந்த உணவுகள், முக்கியமாக ஊறுகாய்கள், அசைவ உணவு வகைகள், மரபணு மாற்றம் செய்யப்பட உணவு வகைகள், வெள்ளை சர்க்கரை,சுத்திகரிக்கப்பட்ட எண்ணைகள் போன்றவைகள் acidic வகை உணவுகள்..

நண்பர்களே..ஒரு முக்கியமான விஷயம்..cancer, diabetes, heart diseases, போன்றவைகள் எல்லாம் ஒரே நாளில் நமக்கு நோயாக வருவதில்லை..நம் வாழ்வில் தொடர்ந்து Acidic வகை உணவுகளையே உட்கொண்டுவரும்போது இதுபோன்ற நோய்கள் சிறிது சிறிதாக வளர்வதே உண்மை..அதனால் முடிந்தவரை alkaline வகை உணவுகளையே தொடர்ந்து உட்கொண்டு, நம் உடலை தொடர்ந்து alkaline நிலையிலேயே வைத்திருந்தால் எந்த தீவிரமான நோய்களும் நம்மை தாக்காது..
இந்த pH level நம் உடலில் எவ்வளவு இருக்கிறது என்பதை வீட்டில் நாமே பரிசோதிக்கலாம்.. சில மருந்துக் கடைகளில் அல்லது இரத்தப் பரிசோதனை நிலையங்களில் "litmus strip" என்பதை வாங்கி, நமது எச்சில் அல்லது சிறுநீரை அதில் சில சொட்டுக்கள் விட்டு பரிசோதிக்கலாம்.. அது சிவப்பு நிறமாக மாறினால் நமது உடல் acidic ஆக உள்ளது எனவும், blue colour  ஆக மாறினால் நம் உடல் alkaline ஆக உள்ளது எனவும் எளிதாக அறியலாம்

நண்பர்களே..இந்த pH level என்பது மிக மிக அடிப்படையான, அதே சமயம் பெரிய அளவில் மருத்துவ உலகிலும் கண்டுகொள்ளப்படாமலும் இருக்கிறது..ஆனால் சில கம்பனிகள் இதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து,சில வகையான பானங்களை pH level க்கு தக்கவாறு முறையாக உருவாக்கி, பெரிய அளவில் சந்தைப் படுத்தி மிகுந்த லாபம் பார்கிறார்கள்..உடல் எடை குறைதல், இருதய அடைப்புக்கு நல்லது என்று சில மருந்துகள், உடல் எடை கூட என்று இன்னும் ஏராளமான products கலை சந்தைப்படுத்துகிறார்கள்..அதில் result இருப்பதற்கு காரணமும் இந்த pH level க்கு முக்கியத்துவம் கொடுப்பதால்தான்..மீண்டும் சந்திப்போம், நன்றி!!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..நேற்றைய பதிவில் நமது உடலில் pH level maintain பண்ணுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்த்தோம்..அதாவது, முடித்தவரை நமது உடலின் pH level யை slightly towards alkaline { 7.20 to 7.45 } ஆக maintain பண்ணவேண்டும்..நாம் உண்ணும் உணவில் calcium, iron, magnesium etc..போன்ற சத்துக்கள் எல்லாம் போதுமான அளவில் உள்ளதா என்று எந்த ஆராய்ச்சியும் நாம் பண்ணவேண்டியதில்லை..acidic உணவுவகைகளை தவித்து, alakaline உணவு வகைகள் மட்டுமே தொடர்ந்து உட்கொண்டு, நமது உடலின் pH level எபோதும் 7.20 to 7.45 அளவிலேயே வைத்திருந்தால் உங்கள் உங்கள் உடல்நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் எனவும் அர்த்தம்..
[04/03 12:58] Sivaraman: யாரும் பிறக்கும்போதே cancer, diabetes, arthritis, psoriasis, heart diseases போன்ற நீடித்த நோய்களுடன் பிறப்பதில்லை..இதுபோன்ற நோய்கள் வந்து சில பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நோய் அப்போதுதான் வந்ததாக அர்த்தமில்லை..அந்த குறிப்பிட்ட நோய் வருவதற்கு 10, 15 வருடங்களுக்கு முன்பிருந்தே நமது உடலின் pH தொடர்ந்து acidic condition ஆக இருந்ததால்தான் இப்போது மேலே சொல்லப்பட்ட நோய்கள் நம் உடலில் கண்டுபிடிக்கப்பட்டன என்று அர்த்தம்..

 நாம் வளர்ந்த பின்தான் மேலே கூறப்பட்ட நீடித்த மற்றும் தீவிரமான நோய்கள் தோன்றுகின்றன..நாம் வளர்வதற்கு முக்கிய காரணம் நாம் உண்ணும் உணவே காரணம் அல்லவா? அதனால் இந்த pH level maintain பண்ணுவதன் அவசியமும், நோய் எவ்வாறு தோன்றுகிறது என்பதும் இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் அல்லவா??

நமது உடல் acidic ஆக இருக்கும்போது என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் சுருக்கமாக பார்ப்போம்..எப்போதும் சோம்பலுடன் இருத்தல், முழங்கால் மூட்டு வலிகள், ஜீரணக் கோளாறுகள் போன்றவற்றில் ஆரம்பித்து cancer வரை அனைத்து நோய்களும் நமது உடல் acidic ஆக இருக்கும்போது தோன்றுகின்றன..சில பெரிய ஊர்களில்  பெரிய அளவில் சில இயற்கை வைத்திய [Naturopathy] மற்றும் Yoga Retreat சென்டர்களில் பல தீர்க்க முடியாத நோய்களையும் தீர்ப்பதாக கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அந்த இடங்களில் எல்லாம் அவர்கள் கொடுக்கும் உணவையே நாம் உண்ணவேண்டும்..முக்கியமாக உடல் எடை குறைக்க நடத்தப்படும் நிறைய சென்டர்களில் அவர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே கட்டாயம் நாம் உட்கொள்ள வேண்டும்..இது போன்ற அனைத்து சென்டர்களிலும் அவர்கள் கொடுக்கும் உணவு வகைகள் அனைத்தும் Alkaline உணவுவகைகளே என்பது உங்களுக்கு தெரியுமா?

உடல் எடை அதிகமாவதற்கு முக்கிய காரணமே நாம் உட்கொள்ளும் acidic உணவு வகைகளே..நமது group இல் ஒரு நண்பர் acidic மற்றும் alkaline உணவு வகைகளின் அட்டவனையை தமிழில் வெளியிட்டால் நல்லது என கேட்டிருக்கிறார்..அதனால் முதலில்  நம் மார்க்கெட்டில் கிடைக்கக் கூடிய சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் எவற்றில் எல்லாம் இந்த Acidic conditiion அதிகமாக உள்ளது, எதில் Alkaline content அதிகமாக உள்ளது என்பதைப் பற்றிய தெளிவான விளக்கங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

 நண்பர்களே..இந்த pH level பற்றிய பதிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.நம் ஆரோக்கியத்தின் அடிப்படையான விஷயம் எளிதான முறையிலும், எளிதான கோணத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது...இதில் பல விஷயங்களும் விளக்கப்பட்டுள்ளன..உங்களில் பலருக்கும் நம் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கும் பல விஷயங்களும் உங்கள் அனுபவத்தில் வெவ்வேறு  விதமாக புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்..ஏனெனில் சில விஷயங்களை, இது இப்படிதான் நடக்கிறது என்று நேரடியாக கூறமுடியாது...மீண்டும் சந்திப்போம், நன்றி!!

****************************************

மருத்துவர் சிவராமன் அவர்களுக்கு மீண்டும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!!

எல்லா முளைகட்டி பயிர்களும் - ALKALINE - தினம் காலை ஒன்று அல்லது ரெண்டு கைப்புடி முளைகட்டி பயிர் உண்பது உடல் தன்மையை ALKALINE ஆக வைக்க உதவும். அல்லது உடலின் acidic தன்மையை மட்டு படுத்தும்!

எலுமிச்சை - acidic - என்று தானே நினைப்போம் - செரிமானத்தில் இது alkaline ஆக மாறுவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன - இப்போ புரியுதா என் அதிக உஷ்ணம் உடலில் இருக்கும்போதோ, மிகுந்த அசிடிக்-ஆன உணவுகளின் மீதோ எலுமிச்சை சாறு பிழியப்படும் காரணம்?

வேறொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.