Friday, October 28, 2016

எம்மை பற்றி...


வணக்கம்!

தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவம் சார்ந்த சமூக விழிப்பு மிகவும் வரவேற்க தக்கது மற்றும் அத்தகைய ஒரு விழிப்பு இப்போதைய கால கட்டத்தில் எல்லோருக்கும் அவசியமும் ஆகிறது. அப்படியானதொரு மாற்று மருத்துவ அறிவு நமக்கும், நம்மை காட்டிலும் இனி வரும் சந்ததியினர் விழிப்புடன் ஆரோக்கியமான திசை நோக்கி பயணிக்க - வாழ நிச்சயமாக அவசியம்


அக்குபங்ச்சரில் ஆர்வம் கொண்டு - M.D. Acu வரை பயின்று முடித்து, மாற்று மருத்துவம் தந்த அற்புதமான தீர்வுகளில் உந்தப்பட்டு பிற மாற்று மருத்துவ வகுப்புகளில் கலந்து, அதனாலும் பலன் பெற்று, இப்படியாக உள்ள பல்வேறு மிகுந்த பலன் தரவல்ல - மருந்து மாத்திரைகளற்ற - நிரந்தர தீர்வு தரவல்ல மாற்று மருத்துவ அறிவை மேலும் பலருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கே எமது நிவர்த்தி மாற்று மருத்துவ வகுப்புகள்.

கடந்த ஒரு வருட காலமாக சூஜோக் மாற்று மருத்துவத்தின் அடிப்படை வகுப்புகள் மற்றும் அதன் 6KI வகுப்புகளை தகுந்த ISA அத்தாட்சி பெற்ற ஆசிரியர் கொண்டு சான்றிதழுடனான வகுப்புகளை நடத்தியுள்ளோம். இதன் மூலம் இன்று வரை நூற்று கணக்கானோர் பயன் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தகுந்த அனுபவமிக்க ஆசிரியரை கொண்டு   நாடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அடுத்து அற்புதமான பலன் தரும் காது மடல் சிகிச்சை எனும் AURICULOTHERAPY வகுப்புகள், சிறந்த அனுபவமிக்க ஆசிரியர் மூலம் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து பல் வேறுபட்ட பயனுள்ள மாற்று மருத்துவ வகுப்புகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

'ஆர்வமுடையோர் பயின்று, பலன் பெற்று, பிறருக்கு பலன் தந்து - மருத்துவம் குறித்த விழிப்படைந்த ஒரு வருங்கால சந்ததிக்கு வழி கோலுங்கள்' என்ற விருப்பத்துடன்....

என்றும் அன்புடன்


S.Kumaran, M.D. Acu, SJT



அடுத்து நடக்க இருக்கும் எமது வகுப்புகள்!!